தள்ளாடும் தாளங்கள்

August 23, 2017 § Leave a comment

உன் மடியில் தலை சாய
தலைவி நான் இல்லை.
உன் தோளில் நீ அணைத்தால்  
தோழியா துணைவியா என்ற தயக்கம்.
அரவணைக்க உரியவன் இருக்க 
உன்னிடம் நான் ஆறுதலை ஏன் தேடுகிறேன்?

Advertisements

கவிதைக்குரிய மோர்க்குழம்பு

July 7, 2017 § Leave a comment

மாங்கனியின் ரசம்
பூசணியில் இறங்க
தாளித்த விதைகள்
ருசியில் மணம் சேர்க்க
கத்திரி வெயிலில் தாகம் தீர்க்கும் மோர்
கொதித்து குழம்பாக
ஆவியில் வடித்த அன்னம் சேர்த்து
ஆவலோடு உண்ண
அமிர்தமானது

PS: Dedicated to my MIL’s Moarkuzhambu

க்ரிதாயுக காதல் கலியில்

July 7, 2017 § Leave a comment

மண்ணெனும் மங்கையின் தாகம் தீர்க
ஆகாயமெனும் அழகன்
காற்றோடு போராடி
மேகத்தை பொழிந்தான்.

அடிவானிலும் தீண்டா காதலர்கள்
நீர்மூலம் தீண்ட
மணந்த மங்கையுள்
சோலைகள் வேர்விட்டன.
இவர்களும் மண்ணின் மைந்தர்கள்தான்.
உடன்பிறப்பை காப்போம்!

 

விண்ணில் ஒரு கண்ணாடி

July 7, 2017 § Leave a comment

ஆதவன் தன் முகம்பார்க்க ஆசைகொள்ள
தலைவன் பிம்பமாக நிலவை படைத்தான்.

தன் வண்ணமாய் தோன்றி
வெள்ளியாய் மின்னும்
அழகில் மயங்கி
சூரியன் பிரகாசிக்க மறந்தான்.

உலகம் உறங்கியது.

நிலவை தேடி கதிரவன் காய
காதல் வெப்பத்தில் உலகம் உயிர் கொண்டது.

இந்த மோகத்தின் நிழலில் வாழும் நமக்கு வெறுப்பு எங்கே?

மறையும் கதிரவன் கொடுத்த வரம்

July 7, 2017 § Leave a comment

பொன் ஒளியில் மூழ்கிய காட்சியில்
பவழம் பாய்ந்த விண்வெளியில்
மறையும் கதிரவன் இன்று
சொர்கத்திற்கு பாதை விரித்தான்.

உணர்வில் மயங்கிய விழிகளை எழுப்ப
வருணனும் வாயுவும் கோடை மழை பெய்ய
சற்றே பொறுஎன்று
தோழிகளோடு சந்திரன் வந்தான்

எங்கே விண்லோகம்என்று
பயம் கொண்ட இந்திரன்தான்
மின்னல் பாணங்கள் வீசினானோ?

PS: Inspired by a golden sunset.

சரணாஞ்சலி

July 7, 2017 § Leave a comment

ஒருவரில் எத்தனை மனிதர்கள்!
கேள்வி எழுப்பும் கோமாளி
ராஜ்ஜியங்கள் அமைக்கும் ராஜதந்திரி
துணிந்து எழுதும் எழுத்தாளி
மறைந்தார்
இழப்புக்கு ஈடுள்ளதோ

PS: For Cho – slightly and lovingly exaggerated 🙂

பந்தம்

July 7, 2017 § Leave a comment

கூட்டை கட்டி, குஞ்சு பொரிச்சு
காத்து வளர்த்து, வாழ்வை கடந்து
முதுமையில் கணவன் (மனைவி) தோழன் (தோழி) என்றால்
மணமணந்தது திருமணம்

Where Am I?

You are currently browsing the தமிழ் / Tamil category at capriciousmusings.